பொள்ளாச்சியின் பழம்பெரும் பொக்கிஷம் | POLLACHI’S ANCIENT TREASURE TROVE TEMPLE
Epigraphic reference can be found in the temple walls of ‘Pollachi SUBRAMANYA SWAMI TEMPLE’, which was earlier built as ‘THIRU AGATHEESWARAMUDAYAR TEMPLE’ dedicated to Shiva during the period of Vikrama Chola and later by Sundara Pandian who ruled Kongu region in 12th-13th century.
கொங்கு பகுதியை ஆண்ட விக்கிரம சோழன், பின் சுந்தர பாண்டியன் காலத்தில் (12-13 ஆம் நூற்றாண்டு) திருப்பணி செய்யப்பட்ட ‘திரு அகத்தீஸ்வரமுடையார்’ சிவாலயம் பிற்காலத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயிலாக புகழ் பெற்றது.
The shrine of Sundareswarar and Mother Meenakshi (Original Temples of Chola & Pandya period) on the south of Subramanya shrine with 24 pillared hall contains stone carvings of Yali with a monolithic Stone chain from its mouth and zodiac signs on the Roof.
தடாதகைப்பிராட்டியார் - மும்முலை அம்மன்:
ஸ்ரீ மீனாக்ஷி (மூன்று மார்பகங்களுடன்) போர்க்கோலம் பூண்டு திக்விஜயம் செல்லும் ஒர் அரிய சிற்பம் இவ்வாலயத்தூணில் அழகுற அமைக்கப் பட்டுள்ளது.
Thadathagai Pirattiyar with Three Breasts :
A rare sculpture Depicting Meenakshi as 'Thadathagai Pirattiyar' going on Tripura Vijayam. When she encounters Lord Shiva her third breast disappears.
'ஒற்றை வார் கழல் சரணமும் பாம்பசைத்து உடுத்தவெம் புலித் தோலும்
கொற்ற வாள் மழுக் கரமும் வெண் நீறணி கோலமும் நூல் மார்பும்
கற்றை வேணியும் தன்னையே நோக்கிய கருணை செய்திருநோக்கும்
பெற்ற தன் வலப் பாதியைத் தடாதகை பிராட்டியும் எதிர் கண்டாள்.'
'கண்ட எல்லையில் ஒரு முலை மறைந்தது கருத்தில் நாண் மடம் அச்சம்
கொண்ட மைந்திடக் குனிதா மலர்ந்த பூம் கொம்பரின் ஒசிந்து ஒல்கிப்
பண்டை அன்பு வந்து இறை கொளக் கரும் குழல் பாரமும் பிடர் தாழக்
கெண்டை உண் கண்ணும் புறவடி நோக்க மண் கிளைத்து மின் என நின்றாள்.'
- திருமணப் படலம் - திருவிளையாடல் புராணம்
Saints
Thirugnana Sambandar, Appar, Sundarar, Manickavasagar, Nataraja, Kamadenu pouring its
milk on Shivalinga, Kannappa Nayanar and Dasavatharas were artistically
depicted in the pillars.
அப்பர்,
சுந்தரர், மாணிக்கவாசகர், கண்ணப்ப நாயனார், தசாவதாரக் காட்சிகள் கொண்ட சிற்பத்தூண்கள்
சுந்தரேஸ்வரர், மீனாட்சி சன்னதிகள் முன் உள்ள 24 தூண் மண்டபத்தில் எழிலுற அமைந்துள்ளன.
'பொழில்வாய்ச்சி' என்ற
பெயர் கூறும் கல்வெட்டு அமைந்துள்ள ‘பொள்ளாச்சி
சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின்’ குடமுழுக்கு விழா இன்று (30-01-2020) சிறப்புற நிகழவுள்ளது.
Consecration ceremony for this ancient temple is performed today (30-01-2020).
#pollachi
#pozhilvaichi #பொழில்வாய்ச்சி
#பொள்ளாச்சி #SubramanyaTemple #StoneChain #zodiacsigns #மீனாட்சி #Meenakshi #Thadathagai
#தடாதகைப்பிராட்டி
#தடாதகைப்பிராட்டி