Saturday, 2 May 2020

IDOL CASTING | சிலை வார்ப்பு

IDOL CASTING | சிலை வார்ப்பு
Location : Karnataka Chitra Kala Parishad, Bengaluru

The craft of making idols using different metals dates back thousands of years. There were many archaeological findings on melting of metals, moulding and casting among various ancient civilisations.  The process of casting greatly affects the level of intricacy and detailing.  Lost wax Method (‘Cire-Perdue’ in French)  casting technique  creates the finest level of detail, in which hot metal is poured into a wax model, which is ‘lost’ during the process.

பல்வேறு உலோகங்களைப் பயன்படுத்தி சிலைகளை உருவாக்கும் கைவினை நுட்பம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது. உலகின் பல்வேறு பண்டைய நாகரிகங்களிடையே உலோகங்களை உருக்குவது, வடிவமைத்தல் மற்றும் வார்ப்பது குறித்த அறிதல் தொல்பொருள் அகழ்வாராய்வின் மூலம் நமக்கு தெரிய வருகிறது.
உலோகச் சிலைகள் பெரும்பாலும் 'செர்-பெர்டியூ' (Cire-Perdue - பிரெஞ்சு மொழி) எனும் முறையில் தான் வார்க்கப்படுகின்றன. 'செர்' என்றால் மெழுகு, 'பெர்டியூ' என்றால் தொலைந்த (lost) என்று பொருள்.  
இம்முறையிலான வார்ப்பு நுட்பத்தின் மூலம் மிக நுணுக்கமான அழகியல் விவரங்களுடன் சிற்பங்களை உருவாக்க முடியும்.
சூடேற்றப்பட்டு, திரவ நிலையில் உள்ள உலோகம், மெழுகு மாதிரியில் ஊற்றப்படும் போது, மெழுகு இளகி, உருகி தன் வடிவம் இழந்த பின்னர் சிலை உருவாவதால்  இக்காரணப்பெயர்.

HISTORY  OF  IDOL  CASTING

Image Source : https://www.harappa.com/blog/dancing-girl-figurine

In the olden days, castings in India were often made in pure copper, but bronze (an alloy consisting of copper and other metals - as it provides stronger and more tensile) quickly became the preferred material. The  famous “Dancing Girl” bronze sculpture, made in 2500 BCE in Mohenjo-daro, is one of the earliest known Indian sculpture created using the lost wax technique.

பழங்காலத்தில் பாரதத்தில் வார்ப்புகள் பெரும்பாலும் தூய செம்புகளில் செய்யப்பட்டன, ஆனால் வெண்கலம் (தாமிரம் மற்றும் பிற உலோகங்களைக் கொண்ட ஒரு கலப்பு உலோகம்)  வலிமை மற்றும் இழுவிசை காரணமாக விருப்பமான உலோகமாக மாறியது). 


கி.மு. 2500 இல் மொஹென்ஜோ-தாரோவில் உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற “நடனப்பெண்” வெண்கல சிற்பம், 'மெழுகு இழப்பு' நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆரம்பகால இந்திய சிற்பங்களில் ஒன்றாகும்.

Medieval Period


In South India, during Pallava Period (8th Century CE) bronze images were modeled and cast.  Some of the most exquisite idols were crafted during the Chola period (10th-12th Century CE) in Tamil Nadu. 

தென்னிந்தியாவில், பல்லவர் காலத்தில் (பொ.யு. 8 ஆம் நூற்றாண்டு) வெண்கலச்சிற்பங்கள் உருவாக்கப்பட்டன. மிக நேர்த்தியான உலோகத்திருமேனிகள் தமிழ்நாட்டில் பிற்கால சோழர் காலத்தில் (பொ.யு.10 -12-ஆம் நூற்றாண்டு) வடிவமைக்கப்பட்டன.
During the medieval period, bronze casting technique and making of bronze idols of traditional icons reached its peak in Tamilnadu. 
The distinguished patron during the 10th century was the widowed Chola Queen, Sembiyan Maha Devi (mother of King Madhurantaka Uttama Chola).
தமிழ்நாட்டில் பாரம்பரிய தெய்வங்களின் வெண்கல வார்ப்பு நுட்பத்தின் உச்ச காலகட்டம் இது எனலாம்.10 ஆம் நூற்றாண்டில் பல ஆலயங்களின் புகழ்பெற்ற புரவலர் சோழ ராணி, செம்பியன் மகா தேவி (மன்னர் மதுராந்தக உத்தம சோழரின் தாய்) ஆவார். 

Vijayanagara Period 

During the 15-16th century,   the sculptors of Vijayanagara Kingdom have casted many copper/bronze idols. Notable is  a portrait sculpture depicting Krishna Deva Raya with his two queens, Tirumalamba and Chinnadevi (at Sri Venkateswara Temple, Tirumala, AP).
15-16 ஆம் நூற்றாண்டில், விஜயநகர சாம்ராஜ்யத்தின் சிற்பிகள் பல செப்பு / வெண்கல சிலைகளை வடிவமைத்துள்ளனர், இதில் குறிப்பிடத்தக்கவை கிருஷ்ண தேவ ராயர், அவரது இரண்டு ராணிகளான திருமலாம்பா மற்றும் சின்னாதேவி (திருமலை திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் ஆலயத்தில் உள்ளன)
Image Source : https://apnewslive.com/krishnadevarayas-jewelry-in-tirumala-gone-for-good/
Copper statue of Sri Krishnadevaraya along with his Queens Tirumala Devi and Chinnadevi paying obeisance to the Lord was presented during his sixth visit on 16-10-1518.


THE  CHOLA CONTRIBUTION | சோழர் பங்களிப்பு

Bronze Idols casted during Chola period are praised for the figures of sensuous depiction, facial expression and for the detailed treatment used in their clothing and jewelry.

Lost wax technique was used for casting bronze idols during Chola-period.  In India, Bronze casting was done for many centuries,  but idols of huge size and large number of bronze sculptures were cast  during the Chola period only. 


பிற்கால சோழர் காலத்தின் வெண்கல சிலைகள், முகபாவனை, ஒய்யாரம், அழகுணர்ச்சி, ஆடை மற்றும் நகைகளில் பயன்படுத்தப்படும் விரிவான சித்தரிப்புக்களால் புகழ் பெற்று விளங்குகின்றன.

சோழர் காலத்தில் வெண்கல சிலைகளை வார்ப்பதற்கு 'மெழுகு இழப்பு' நுட்பமே பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில், வெண்கல வார்ப்பு பல நூற்றாண்டுகளாக செய்யப்பட்டிருந்தாலும்.  சோழர் காலத்தில் மட்டுமே பெரிய அளவிலான உருவத்தில் ஏராளமான வெண்கல சிலைகள் உருவாக்கப்பட்டன்.



The Chola period is considered as a remarkable period for its idols from Bronze and are admired for its artistic quality. Chola bronze idols are the most sought after collectors’ items by art lovers all over the world.  The most prominent one is the Nataraja  idol.
சோழர் கால வெண்கல சிலைகள் உலகெங்கிலும் உள்ள பழங்கலை ஆர்வலர்களால் சேகரிக்கப்ப்டும் பொருட்களில் மிகவும் விலை மதிப்பற்றதாக கருதி விரும்பப்படுகின்றன. மிக முக்கியமானது நடராஜர் சிலை.

ARTISANS | கைவினைஞர்கள்

This  artwork is unique of a kind and is never reproduced on a large scale.  Technique and skill were passed from generation to generation. 
Artisans are traditional Viswakarma Sthapathis - the descendants of the famous Chola School of bronze casting of 9th to 12th centuries.

The technique of casting bronze idols is still skillfully practiced in South India, particularly in the areas nearby Kumbakonam, Tamilnadu.

இந்த வகையான கலை நுட்பத்தினால் பெரிய அளவிலான உற்பத்திகள் ஒருபோதும் செய்யப்படவில்லை.  நுட்பமும் நுணுக்கமும் தலைமுறை  தலைமுறையாக பாதுகாக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டது.

9 முதல் 12 ஆம் நூற்றாண்டுகளின் புகழ்பெற்ற சோழர் காலத்திய வெண்கல வார்ப்பு கைவினைஞர்களின் சந்ததியினரால், தமிழ்நாட்டின் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் இன்றும் இக்கலை உயிர்ப்புடன் உள்ளது.

LOST-WAX  PROCESS | மெழுகு இழப்பு செயல்முறை :

In this method of metal casting, a molten metal (or the panchaloham) is poured into a mould that has been created by means of a wax model.

These highly-detailed lost wax sculptures of exquisite quality and take several weeks or months to make. Given the difficulty of the technique and the time-consuming process of creating these pieces, high quality lost wax sculptures are increasingly difficult to find. 

இந்த முறையில், ஒரு உருகிய உலோகம் (அல்லது பஞ்சலோஹம்) ஒரு மெழுகு மாதிரியின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு அச்சுக்குள் ஊற்றப்படுகிறது.

நேர்த்தியான தரத்தில் மெழுகு மாதிரிகள் மற்றும் தயாரிக்க பல வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகக்கூடும்..
சிரமமான தொழில்நுட்பம் மற்றும் நுணுக்கமாக துண்டுகளை இணைப்பதற்கு தேவைப்படும் காலம் போன்றவற்றால், இம்முறையால் உருவாக்கப்படும்  உயர்தர சிற்பங்கள் அரிதாகவே விளங்குகின்றன.




The elaborate and complex lost wax technique of metal casting is divided into many stages.
உலோக வார்ப்பின் சிக்கலான இந்த நுட்பம் பல நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
 

1.  Creation of the wax model |மெழுகு மாதிரியை உருவாக்குதல்:

The first step in the process is to create a wax model that is an exact replica of the finished bronze idol.

இந்த செயல்முறையின் முதல் படி, மெழுகு மாதிரியை உருவாக்குவது. செய்து முடிக்கப்பட்ட வெண்கல சிலையின் இறுதி வடிவை ஒத்திருக்கும் வண்ணம் இம்மாதிரி மிக நேர்த்தியாக உருவாக்கப்படும்



Beeswax and ‘kungilium’ (
sap of a tree) are mixed with oil and made as dough/paste. The figure is made by artisan’s finger from this mixture fashioning all the minute details.  

தேன் மெழுகு மற்றும் ‘குங்கிலியம்’ (மர  பிசின்) எண்ணெயுடன் கலந்து மாவு போல் தயாரிக்கப்படுகிறது.

அனுபவமிக்க கைவினைஞரின் நெளிவான விரல்கள் இந்த கலவையை பிசைந்து நுணுக்கமாக மெழுகு மாதிரியை உருவாக்குகிறது. 


After the various pieces are completed, they are carefully assembled and smoothed to form the final wax model. Flame of the lamp is used for heating to connect the pieces and meld together. 

தனித்தனியான பல்வேறு துண்டுகள் செய்து முடிந்தபின், அவை கவனமாக ஒன்றிணைக்கப்படுகிறது.

துண்டுகளின் இணைப்புப்பகுதிகள் விளக்குகளின் சுடர் மூலம் வெப்பப்படுத்தப்பட்டு மென்மையாக்கி இணைக்கப்படுகின்றன. 


After this, the wax models are placed into water to ensure solidification and that they do not loose shape in the Sun.  
இதற்குப் பிறகு, மெழுகு மாதிரிகள் திடப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காகவும், அவை சூரிய வெப்பத்தில் வடிவத்தை இழக்காமலிருக்கவும் தண்ணீரில் வைக்கப்படுகின்றன.

2.  Mould  creation  around the  wax  model | மெழுகு மாதிரியைச்சுற்றி அச்சு உருவாக்கம்:

A clay mould is made around the wax model as follows:

 
The entire figure is then coated with clay until the mould is of a necessary thickness. Once the paste is dried, tiny holes were made in the clay cover as a provision for the molten wax to be  drained out. Then wax model is dried for further process.

முழு மெழுகு மாதிரி உருவமும் தேவையான தடிமண் அளவுக்கு களிமண்ணால் பூசப்படுகிறது. உருகிய மெழுகு வெளியேற்றப்படுவதற்கான ஏற்பாடாக களிமண் பூச்சில் சிறிய துளைகள் உருவாக்கப்பட்டு,
அடுத்தகட்ட செயல்முறைக்காக மெழுகு மாதிரி உலர்த்தப்படுகிறது. 


3.  Lost  wax  method | மெழுகு இழப்பு முறை

The wax model is fired in an oven with cow-dung cakes. 


As it is heated, the wax melts and flows out, while some of it vapourizes, thus melting or ‘losing’ the wax.

மெழுகு மாதிரி, நாட்டு பசு  மாட்டு சாண வரட்டிகள் கொண்ட அடுப்பில் சுடப்படுகிறது. அது சூடாகும்போது, ​​மெழுகு உருகி வெளியேறும், சில ஆவியாகும், இதனால் மெழுகு உருகி அதனை ‘இழக்கிறது’.

 

4.  Casting of the mould| அச்சு வார்ப்பு

For Five Metal (Panchaloha),  five metals gold, silver, copper, brass and lead are the 5 main ingredients. The three main ingredients for contemporary bronzes are copper, brass and lead.

Copper is a necessary element in bronze, because copper offers more malleability than other metals.  This gives the sculptor a metal he can work with after the casting process to make minute alterations that may be needed for a perfect finished piece.


ஐந்து உலோகங்கள் (பஞ்சலோஹம்), தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை மற்றும் ஈயம் ஆகியவை. சமகால வெண்கலங்களுக்கான மூன்று முக்கிய பொருட்கள் தாமிரம், பித்தளை மற்றும் ஈயம்..

தாமிரத்தின் சேர்ப்பு வெண்கலத்தில் அவசியமான ஒன்று, ஏனென்றால் செம்பு மற்ற உலோகங்களை விட அதிக மெல்லிய தன்மையை வழங்குகிறது. வார்ப்புக்குப் பிறகு சிற்பத்தில் மிக நுணுக்கமான செதுக்கல்களை செய்ய சிற்பிக்கு இது உதவுகிறது.
 

To melt the bronze, a temperature of at least 1800 degrees Fahrenheit is needed for approximately two to three hours.  

வெண்கலத்தை உருக்க, குறைந்தது இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை குறைந்தபட்சம் 1800 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை தேவைப்படுகிறது.


Once the firing is completed the moulds are removed with the ‘channels facing upwards.

The channels are used  for 3 purposes  :
1. the larger one at the base for the metal to be poured in
2. the smaller ones to allow for the molten wax to exit 
3. while still smaller ones on top to allow air to exit as the metal moves in.

நாழிகள் 3 விதங்களில் பயன்படுகிறது
1. உலோகத்தை ஊற்றுவதற்கானது - பெரியது,
2. உருகிய மெழுகு வெளியேற அனுமதிக்க - சிறியது 
3. காற்று வெளியேற அனுமதிக்க - மற்றொரு சிறியது,

Bare footed with  Devotion



While pouring  the molten  Metal  in 1600-1800 Fahrenheit !
சுமார் 1800 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் தீக்கணங்க்குகள் உள்ள பணிச்சூழலில் தொழிலாளர்கள் யாரும் பாதுகாப்புக்கென காலணிகள் அணிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




Forceps are used to pick up the containers with the melted bronze so that the Molten bronze (Panchalokha or any other metal) can be poured into the molds through one of the ‘nalis’.
உருகிய வெண்கலம் உள்ள கொள்கலன்கள் பெரிய இடுக்கிகளால் எடுத்து நாழிகள் மூலம் அச்சுகளில் ஊற்றப்படுகின்றது. 


When the metal cooled and solidified, the clay cover is carefully removed that reveals a solid bronze idol.   

உலோகம் குளிர்ந்து திடப்படுத்தப்பட்ட பிறகு, ​​களிமண் பூச்சு கவனமாக அகற்றப்பட்டவுடன், திடமான வெண்கல சிலையை கிடைக்கிறது.


5.  Finishing 

After the molds cool down, the bronze can be uncovered by chipping the layers of coating away. The entire idol is filed as there is always some small defect associated with casting process.    Delicate reconstructive work may be required by heating up strips of metal to fill in the holes.

For this reason a perfectly cast sculpture with no defects and perfect proportion is a prized piece, since only masters of the art of bronze casting can achieve perfection in the entire process.

வார்த்தெடுப்பின் போது தோன்றும் சில சிறிய குறைபாடுகளைக் களைய முழு விக்கிரகமும் தேய்த்து, கீறல்களை அகற்றி,  சீரமைக்கப்படுகிறது. துளைகளை நிரப்ப உலோக கீற்றுகளை சூடாக்குவதன் மூலம் மென்மையான புனரமைப்பு வேலை தேவைப்படலாம்.

நுட்பம், துல்லியம், அர்ப்பணிப்பு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக நுணுக்கமான கலைத்திறன் ஆகியவையே 'மெழுகு இழப்பு' முறை வெண்கல வார்ப்பின் சிறப்பான மூலக்கூறுகள்,


The idol is then filed and buffed to remove scratches and give the finished piece a shine.

Care, precision, time and above all artistic ability are vital ingredients to practicing the lost wax method of bronze casting.


இந்த காரணத்திற்காகவே, சரியான விகிதாச்சாரத்துடன் கூடிய, குறைபாடுகள் ஏதும் இல்லாத ஒரு முழுமையான வார்ப்பு சிற்பத்திற்கு ஒரு தனி மதிப்புண்டு.
,


Handcrafted by skilled artisans, each sculpture made using the lost wax technique is unique as the beauty of lost wax sculptures lies much in their detailing.  
வெண்கல வார்ப்பு கலையில் அர்பணிப்புடன் பணியாற்றும் அனுபவமிக்க  கைவினைஞர்களால் மட்டுமே ஒவ்வொரு வார்ப்பின் போதும் சிறு  குறையில்லாத முழுமையான  தெய்வத்திருமேனிகளை  உருவாக்க முடியும்.

Location : Karnataka Chitra Kala Parishad, Bengaluru





Credits: 


THANKS to :

Kuberan Icon Industries, Swamimalai, TN

for providing details and for permission for photography